Home நிகழ்வுகள் தமிழகம் தமிழகத்தில் 15000-ஐ தாண்டியது கொரோனா எண்ணிக்கை

தமிழகத்தில் 15000-ஐ தாண்டியது கொரோனா எண்ணிக்கை

254
0
தமிழகத்தில் 15000-ஐ தாண்டியது கொரோனா எண்ணிக்கை

தமிழகத்தில் 15000-ஐ தாண்டியது கொரோனா எண்ணிக்கை. நேற்று புதிதாக 759 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை: சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ துவங்கி இன்று உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மஹாராஷ்டிராவில் தான் அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. மஹாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 759 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கொரோனா உறுதியான 759 பேரில் சென்னையில் மட்டும் 624 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 363 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 7,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று 5 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளனர். நேற்று மட்டும் 12,155 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களும் 41 அரசு மற்றும் 27 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 68 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நேற்று தொற்று உறுதியான 759 பேரில் 710 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 24 பேர் மகாராஷ்டிரா, 6 பேர் ராஜஸ்தான், 3 பேர் மேற்கு வங்கம்,

5 பேர் பிலிப்பைன்ஸ் மற்றும் 7 பேர் லண்டனிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆவர்.

Previous articleஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய இராணுவ உதவியை கேட்கும் மேற்கு வங்காளம்
Next articleஸ்விக்கி ஜொமாட்டோவில்  மதுபாட்டில்கள் ஹோம் டெலிவரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here