Home நிகழ்வுகள் இந்தியா கைதி வாக்குரிமை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951

கைதி வாக்குரிமை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951

395
0
கைதி வாக்குரிமை சட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் பொதுநல மனு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951

கைதி வாக்குரிமை: சட்ட மாணவர்கள் பொதுநல மனு. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 என்ன சொல்லுகிறது? சட்டக்கல்லூரி  மாணவர்கள் வழக்கு தள்ளுபடி.

சட்டக்கல்லூரி மாணவர் பொதுநல மனு:

நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி  டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது .

டெல்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களான பிரவீன் குமார் சவுத்ரி, குமார் துபே மற்றும் பிரேர்னா சிங் ஆகிய முவரும் இணைந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிறைக்கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமைகோரி ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தனர்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 1:

மனுவில்  அவர்கள் வாக்களிப்பது அடிப்படை உரிமை. மேலும் நம்முடைய அரசியல் சட்டம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் தேர்தல் ஆணையம் குற்றவாளிகளையும், சிறைக்கைதிகளையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

கைதிகள் தங்களது வாக்கினை பயன்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 1, கைதிகளின் வாக்குரிமையை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது போல் அமைந்துள்ளது. எனவே இந்தப் பிரிவினை செல்லாது என அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்நீதிமன்றம் சிறைக்கைதிக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுத் தரவேண்டும் எனவும் மனுவில் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்

இந்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி படேல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு  கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கும் விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் வழங்கிருப்பதை மேற்கோள் காட்டினர்.

மனுதாரர் கோரும் வாக்களிக்கும் உரிமை என்பது மக்களுக்கு சட்டப்படியான ஒரு அமைப்பினால் வழங்கப்பட்ட உரிமை.

அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அடைப்படை உரிமைகளில் அடங்காது.

தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த பொது நலம் சார்ந்த மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர் .

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951

உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மறுபரிசீலனைக்குரியது என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரித்துள்ளனர் .

மேலும் அவர்கள் பொதுவாக வாக்களிக்கும் உரிமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவினையே நாம் செயல்படுத்தி வருகிறோம் .

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஒரு வாக்காளர் ஆவதற்கான தகுதிகள் என்பது ஒரு இந்திய குடியுரிமையை  கொண்டிருப்பவராகவும், 18  வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

மேலும் எந்த வித சட்டங்களின் படியும் அல்லது நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவராகவும் இருத்தல் கூடாது. அவ்வாறு தண்டனை பெற்றவர்கள் வாக்களிக்க தகுதி அற்றவர்கள் என கூறுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 சட்டமானது தேர்தல் குறித்த பல்வேறு நிபந்தனைகளையும் வழிமுறைகளையும் கொண்டுள்ளது

பொதுமக்கள் பாராட்டு

நாட்டில் சாதாரணமாக வாழும் குடிமகன்கள் கூட தேர்தலில் வாக்களிக்க பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.

இப்படி ஒரு சூழ்நிலையில் சிறையில் இருக்கும் கைதி வாக்குரிமை பற்றி நீதிமன்ற படி ஏறிய சட்ட கல்லூரி மாணவர்களை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்

மனுதாரர் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் ஏதேனும் திருத்தம் கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here