Home நிகழ்வுகள் இந்தியா போதையில் தான் பெண்கள் போராட வருகிறார்கள் – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

போதையில் தான் பெண்கள் போராட வருகிறார்கள் – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

273
0
பெண்கள் போராட

போதையில் தான் பெண்கள் போராட வருகிறார்கள் என பாஜக தலைவர் திலீப் கோஷ் மேடையில் பேசிய பேச்சு தற்பொழுது சர்ச்சையாகி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரபின்திர பாரதி என்ற பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, ‘ பெண்கள் நம் பாரம்பரிய மரபுகளை மறந்து பாழாக்கி வருகிறார்கள். போராடுவதில் குறியாக உள்ளார்கள்.

அவர்களாக போராடவில்லை. அவர்களுக்கு நன்கு போதை ஏற வைத்து போராட்டத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

போதை தெளியும் வரை நன்றாக கூச்சல் போட்டு போராட்டம் செய்கின்றனர். இவர்கள் வங்கப்பெண்கள் எனக் கூற வெட்கமாக உள்ளது.

உடனே இதற்கு காரணமானவர்களை கண்டு பிடிக்கவேண்டும்’ இவ்வாறு அவர் விழாவில் பேசினார்.

பெண்களை பற்றி தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை வெடித்துள்ளது. மகளிர் அமைப்பினர் இதற்கு கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here