டெல்லி கலவரம்: அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் உள்ளிட்டோர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
டெல்லியில் நடந்த வன்முறைக்கு அமித்ஷவே காரணம். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என நாட்டின் பல்வேறு தலைவர்கள் குற்றம் சுமத்தினர்.
குடியரசு தலைவர் சந்திப்பு
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ன்மோகன் சிங், குலாம் நபி ஆஸாத், ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோனி, ஆனந்த் சா்மா, மல்லிகாா்ஜுன காா்கே, குமாரி செல்ஜா, ரண்தீப் சுா்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் ஆகியோர் குடியரசு தலைவரைச் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் டெல்லி வன்முறையில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். 200 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை நான்கு தினங்களாக நடந்து வருகிறது.
இது ஆளும் அரசின் தோல்வியை பிரதிபலிக்கிறது. மாநில அரசும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தவறவிட்டது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் முதல் குடிமகனாகிய நீங்கள் (குடியரசுத் தலைவா்) குடிமக்களின் வாழ்க்கை, சுதந்திரம், சொத்துகள் ஆகியவையை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி அரசும், மத்திய பாஜக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு பொறுப்பேற்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை பதவி விலகச் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.