Home நிகழ்வுகள் இந்தியா போதை வெறியில் ரோட்டில் சென்ற பாம்பை பிடித்து கடித்து தின்ற இளைஞன்! பரபரப்பு வீடியோ

போதை வெறியில் ரோட்டில் சென்ற பாம்பை பிடித்து கடித்து தின்ற இளைஞன்! பரபரப்பு வீடியோ

650
0

போதை வெறியில் ரோட்டில் சென்ற பாம்பை பிடித்து கடித்து தின்ற இளைஞன்! பரபரப்பு வீடியோ!!! மதுக்கடைகள் திறந்த பின் நடந்த கோரச்செயல்.

கொரோனா பரவலின் காரணமாக இந்தியா முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. கர்நாடகா மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன் கடைகள் திறக்கப்பட்டது.

இன்று முதல் தமிழ் நாட்டில் மதுக்கடைகள் திறக்கபடவுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குமார் என்ற இளைஞர் ஒருவர் மதுக்கடைக்கு சென்று வலுவாக குடித்துள்ளார்.

மது போதையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ரோட்டில் சென்று  கொண்டிருக்கும்பொழுது அவர் செல்லும் வழியில் பாம்பு ஒன்று குறிக்கிட்டுள்ளது.

பாம்பை பார்த்ததும் கோவமான குமார் சற்றும் அசராமல் அந்த பாம்பை கையில் எடுத்து துண்டு துண்டாக கடித்து துப்பியுள்ளார்.

இதை மொபைல் போனில் வீடியோ எடுத்த சில நபர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here