Home அரசியல் ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ்  யாத்வ் மீது துப்பாக்கி சூடு

ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ்  யாத்வ் மீது துப்பாக்கி சூடு

346
1
ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ்  யாத்வ் மீது துப்பாக்கி சூடு

ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ்  யாத்வ் மீது துப்பாக்கி சூடு. சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில் மர்ம நபர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார்.

புதுடில்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி 62  இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது.

நரேஷ்  யாத்வ் ஆம் ஆத்மி எம்எல்ஏ

நரேஷ் யாத்வ் என்ற ஆம் ஆத்மி வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து கோவிலுக்குச் சென்று வழிபட்டு இரவு காரில் ஆதரவாளர்களுடன் வீடு திரும்பியுள்ளார்.

இவர் மெஹரூலி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்க உள்ளார். அருணா மார்க் சாலையில் வந்தபோது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

மர்ம நபர் 4 முறை துப்பாக்கியால் நரேஷ் யாதவை நோக்கி சுட்டுள்ளான். அதிஷ்டவசமாக நரேஷ் காயமின்றி தப்பிவிட்டார்.

ஆம் ஆத்மி கட்சி தொண்டர் மற்றும் அவருடைய ஆதரவாளர், அசோக் மான் என்பவர்  குண்டடிபட்டு பலியானார்.

தேர்தல் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் என்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இது தான் டெல்லியின் சட்ட ஒழுங்கு எப்படி உள்ளது என்பதற்கு உதாரணம் என நரேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டுவிடு தப்பிய மர்ம நபர் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here