ட்ரம்ப் மீது அமேசான் குற்றச்சாட்டு எதற்காக இருக்கும்?
அமேசான் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய 10 பில்லியன் டாலர் ராணுவ ஒப்பந்தம் கைமாறியதற்கு ட்ரம்ப் தான் காரணம் என அவரை விசாரிக்க அமேசான் வழக்கு தொடர்ந்துள்ளது.
Cloud computing திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பென்டகன் கடந்த அக்டோபர் மாதம். மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கியது.
இந்த ஒப்பந்தம் முதலில் அமேஸானுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
Oracle மற்றும் IBM அதற்கு முந்தைய சுற்றில் வெளியேறியதால் அமேசானுக்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தது.
Cloud computing or jedi என்பது அமெரிக்க ராணுவ பாதுகாப்பு அமைப்பின் உள்கட்டமைப்பு மற்றும் அமெரிக்க ராணுவ அலுவலகத்தில் இருந்தே போர்க்களத்தில் உள்ள வீரர்களோடு தொடர்பு ஏற்படுத்துவது.
அவர்களின் திறனை மேம்படுத்துதல், திட்டமிடல் போன்றவற்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கான ஒப்பந்தம் ஆகும்.
முதலில் இந்த ஒப்பந்தம் அமேசானுக்கு தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையீட்டால் இது கைமாறிப்போனது.
அமேசானுக்கு எதிராக களமிறங்கிய ட்ரம்ப்
ஜூலை மாதம் இந்த ஒப்பந்தத்தில் திடீரென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையிட்டு அதன் போக்கை திசை திருப்பியதாக, ட்ரம்ப் மீது அமேசான் அமேசான் குற்றச்சாட்டு கூறியது.
ட்ரம்ப் வந்த பின் மீண்டும் அனைத்து ஏல விவரங்களையும் சரி பார்ப்பதாகவும் மற்ற நிறுவனங்கள் போட்டித்தன்மையில் ஏலம் எடுக்கப்படவில்லை என்று குறை கூறுவதாகவும் ட்ரம்ப் கூறும் முன்பே பென்டகன் முடிவினை வெளியிட ஆயத்தமாக இருந்தது.
ட்ரம்ப் தங்கள் நிறுவனத்தின் மீது இருந்த முன்பிரச்சனை காரணமாகவே தங்களை நிராகரித்து விட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக அமேசான் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
மேலும் தற்போது உள்ள பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் மற்றும் பிற அரசு அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
இதற்கு ஆதாரமாக 2018-ல் வெளியான தகவல் ஒன்றையும் அமேசான் மேற்கோள் காட்டியுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அப்போதைய பாதுகாப்பு அமைச்சரிடம் அமேசானை வெளியேற்றும் படி கூறியதாக குறிப்பிட்டிப்பதை சுட்டிக்காட்டியுள்ளது அமேசான்.
மேலும் தகவல்களை சேகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. ட்ரம்ப் தனது பதவியின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கு பாதுகாப்பு அதிகாரி பதவி விலகுவது இயலாத காரியம் என்பது போல பென்டகன் கருத்து தெரிவித்துள்ளது.