கொரோனா ஊரடங்கால் பல மாநிலங்களலிலும் சிக்கியுள்ள மக்களை அவர் அவர் நகரங்களுக்கு செல்ல விமானங்கள் இயக்கம். ஏர் இந்தியா சிறப்பு உள்நாட்டு விமானங்களை பல்வேறு நகரங்களில் இருந்து மே 19 முதல் ஜுன் 2 வரை இயக்குகிறது. இதற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
முக்கிய நகரங்களில் இருந்து
டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து பெரும்பாண்மையான விமானங்கள் இயக்கப்படும்.
சென்னையிலிருந்து மே 19 இல் கொச்சி செல்ல மட்டும் விமானம் இயக்கப்படும்.
டெல்லியிலிருந்து 173, மும்பையிலிருந்து 40, ஹைதராபாத்திலிருந்து 25, கொச்சியிலிருந்து 12 ஆகிய எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுகிறது.
ஹைதராபாத்திலிருந்து மும்பை, டெல்லி மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களுக்கும் இந்த சிறப்பு உள் நாட்டு விமான சேவை இயக்கப்படுகிறது மற்றும் மேற்கண்ட ஊர்களிலிருந்து ஹைதராபாத்திற்கும் விமான சேவை மே 19 முதல் இயக்கப்படுகிறது.
பெங்களுருவில் இருந்து மும்பை, டெல்லி மற்றும் ஹைதராபாத் மற்றும் புவனேஷ்வரில் இருந்து பெங்களுருக்கும் விமான சேவை இயக்கப்படுகின்றன.
வெளிநாட்டு இந்தியர்களுக்கு தகுந்தார் போல் அட்டவணை
“வெளிநாட்டு இந்தியர்களை மீட்க இரண்டாம் கட்டமாக எடுக்கப்படும் நடவடிகைகளுக்கு தகுந்தார் போல் உள்நாட்டு விமானங்களுக்கான அட்டவணை தயார்செய்யப்பட்டுவிட்டது, உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து அனுமதி கிடைத்த உடன் அட்டவணை வெளியிடப்படும்” என விமான போக்குவரத்து அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா விதிமுறை கட்டாயம்
இந்த விமான போக்குவரத்து அனைத்திலும் கொரோனா ஊரடங்கு விதிமுறை பின்பற்றப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.