ஏர்டெல்லும் அம்பேல்: மொத்தமாக தீர்த்துக்கட்டியது ஜியோ!
இந்தியத் தொலைத்தொடர்பு வரலாற்றில் ஏர்டெல் பங்கு மிகவும் பெரியது. அவ்வளவு வாடிக்கையாளர்களையும் தன்பக்கம் இழுத்துக்கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க்.
போன் என்றால் நோக்கியா, சிம் என்றால் ஏர்டெல் என இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவைத் தன்வசப் படுத்தியிருந்தனர்.
குறிப்பாக ஏர்டெல்லை இந்தியாவின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சென்றது ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான விளம்பரம்.
ஆண்ட்ராய்டு வந்தது நோக்கியா இருக்கும் இடம் தெரியாமல் போனது. ஜியோ வந்தது 2 நிறுவனங்கள் முற்றிலும் ஊத்தி மூடிப்பட்டு விட்டது.
எஞ்சி இருக்கும் நிறுவனங்களும் உயிர் பிழைக்குமோ? பிழைக்காதோ? என ஐசியு நோயாளி ரேஞ்சுக்கு சென்றுவிட்டது.
குறிப்பாக ஏர்டெல். 3வது காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் 45 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டது.
ஏர்டெல்லின் ஆண்டு வருமானமும் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. குறிப்பாக ஏர்டெல் கட்டுப்பாட்டில் இருந்த ரயில்வே இணையச் சேவையை ஜியோ கைபற்றிவிட்டது.
ரயில்வேயில் இருந்து ஏர்டெல்லை மொத்தமாக தீர்த்துக்கட்டியுள்ளது. இதனால் 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
ரயில்வே மூலம் ஏர்டெல்லுக்கு, ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. தற்பொழுது அதுவும் காலி. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஏர்டெல் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
விரைவில் இந்த நிறுவனமும் மூடுவிழா கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.