Home நிகழ்வுகள் தமிழகம் லதாவைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ வேலு; உருட்டுக்கட்டையுடன் உறவினர்கள்

லதாவைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ வேலு; உருட்டுக்கட்டையுடன் உறவினர்கள்

490
0
லதாவைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ
இடதுபுறம்: சைக்கோ வேலுச்சாமி. வலதுபுறம்: கோப்புப்படம்

லதாவைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ வேலு; உருட்டுக்கட்டையுடன் உறவினர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் லதா-வேலுச்சாமி தம்பதியினர்.

இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது. கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நீண்ட நாட்களாக இருந்துள்ளது.

இதனால் லதா கொண்ணகட்டு பட்டியில் அவருடைய அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக விராலிமலை பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வந்துள்ளார் லதா. தினமும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு கடைக்கு வேலைக்குச் சென்றுவிடுவார்.

லதா பிரிந்து சென்றாலும், சைக்கோ கணவன் வேலு விடுவதாய் இல்லை. நேராக லதா வேலை செய்யும் கடைக்குள் புகுந்து சட்டையிட்டுள்ளான்.

பட்டப் பகலிலேயே ஆள் நடமாட்டமுள்ள பேருந்து நிலையத்தில் லதாவை சரமாரியாகக் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டான்.

கொலை செய்தவுடன் நேராக போலீஸ் நிலையத்தில் சரணடைந்துவிட்டான். சிலமணி நேரங்களில் வேலுவுக்கு கைவிரல் உடைந்துவிட்டது என மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

லதாவின் உறவினர்கள் வேலுவை அடித்துநொறுக்க உருட்டுக்கட்டையுடன் மருத்துவமனைக்குள் நுழைந்துவிட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

போலீசார் உறவினர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, வேலுவை இலுப்பூர் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

தாய் இறந்த செய்தி கேட்டு, பள்ளியில் இருந்து வந்த இருமகன்களும் கட்டிப்பிடித்து அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உறைய வைத்துவிட்டது.

Previous articleஅந்த நடிகைக்கு இப்படி ஒரு நோயா? மரணத்தின் பிடியில் இருந்து உயிர் தப்பினார்
Next articleஏர்டெல்லும் அம்பேல்: மொத்தமாக தீர்த்துக்கட்டியது ஜியோ!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here