இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளம்பரங்களில் அதிகம் நடித்து வருகிறார்.
2009 ஆம் ஆண்டு அமரபலி என்ற நிறுவனம், விளம்பரத் தூதராக மகேந்திர சிங் தோனியை ஒப்பந்தம் செய்துகொண்டது.
அமரபலி என்ற நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம். இந்நிறுவனத்திற்கு விளம்பரத் தூதராகவும், மார்க்கெட்டிங் மற்றும் பொது நிகழ்ச்சிகள் தொடர்பான நிகழ்வுகளிலும் தோனி கலந்து கொண்டுள்ளார்.
இதற்காக அவருக்கு சில கோடிகள் சம்பளத் தொகையாகப் பேசப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ரூபாய் 38 கோடி அளவில் இதுவரை தராமல் இழுத்தடிப்பு செய்துள்ளது அந்த நிறுவனம்.
இத்தனை வருடங்கள் ஆகியும் தோனிக்கு தர வேண்டிய தொகையை அந்த நிறுவனம் தரவில்லை. எனவே, தோனி அந்த நிறுவனத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார்.
நஷ்ட ஈடாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை ஜப்தி செய்ய வழங்க உத்தரவிடுமாறு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார் தோனி.