வாசிங்டன்: செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வருடம் அமரிக்காவில் நடக்கவிருக்கும் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவில் தற்போது நடந்துவரும் இனப்பிரச்சனைகள், இந்தியா-சீனா எல்லை பிரச்சனைகள் , கொரோனா போன்ற பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியதாக தெரிகிறது.
பிரதமர் அலுவலகம்
பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த அறிக்கையில், தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் உள்நாட்டு பிரச்சனைகள் விரைவில் முடிவிற்கு வர வாழ்த்துக்களை பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இருநாட்டுகளுக்கும் இடையே நல்லுரவு
“அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்ததை நினைவு கூர்ந்தார். பிரதமர் மோடி தெரிவிக்கையில் ட்ரம்பின் அந்த வருகை நினைவு கூரத்தக்க மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் இருநாட்டுகளுக்கும் இடையே நல்லுரவை மேம்படுத்துவதாக அமைந்திருந்தது.,” என அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.