Home நிகழ்வுகள் இந்தியா வெடி மருந்து கொடுத்து யானை கொலை

வெடி மருந்து கொடுத்து யானை கொலை

0
339
வெடி மருந்து கொடுத்து யானை கொலை

வெடி மருந்து கொடுத்து யானை கொலை. கேரளாவில் காட்டு யானை ஒன்று அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்ததால் உயிரிழந்துள்ளது.

கேரளா: கேரளா அதன் இயற்கை எழில் கொஞ்சும் அழகால் God’s Own Country என்றே அறியப்படுகிறது. யாணைகள் அதிகம் இங்கு காணப்படுவதோடு அவை மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதை இங்கு காண முடியும்.

அப்படிப்பட்ட கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது. இறந்த அந்த பெண் யானை கர்பமாக இருந்துள்ளது.

இந்த யானைக்கு யாரோ அன்னாசி பழத்தில் வெடிபொருட்களை வைத்து கொடுத்துள்ளனர். இதனை யானை கடித்து உண்டபோது வெடிபொருட்கள் வெடித்துள்ளன.

இதில் இந்த யானை வாய், தாடை முதலிய பகுதிகளில் பலத்த காயங்களுடன் தெருக்களில் அங்கும் இங்கும் ஓடியுள்ளது. வலியால் துடித்தபோதும் அந்த யானை யாரையும் தாக்கவில்லை.

எந்த பொருளையும் சேதப்படுத்தவில்லை என அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு யானை உணவு உட்கொள்ள முடியாமல் தவித்துள்ளது.

சேதமடைந்த வாய்ப்பகுதியில் ஈக்கள் மொய்ப்பதால் அங்கு ஒரு நீர் நிலையில் நின்று தண்ணீரை தெளித்துக்கொண்டு இருந்தபோது நின்ற நிலையிலேயே இறந்துள்ளது.

முன்னதாக யானைக்கு நேர்ந்ததை அறிந்த வனத்துறையினர் அதற்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக அருகில் சென்றபோது யானை காட்டுக்குள் ஓடி தன் கூட்டத்துடன் கலந்துள்ளது.

அதன் பின்னர் யானையை நீர்நிலையில் கண்டு அதன் அருகில் சென்றபோதுதான் அது இறந்துபோய் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த இரக்கமற்ற செயலை கண்டித்து அனைவரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

யார் இந்த பாதக செயலை செய்தது என கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநில முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here