ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா தொற்றா? திடீர் பரிசோதனை. புதிதாக வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை செய்யப்பட்டார்.
ரேபிட் கிட் மூலம் வெறும் 10 நிமிடத்தில் கொரோனா இருக்க என்பதை உறுதி செய்து விடலாம். ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது.
இந்தியாவில் கொரோனா இருக்கிறதா இல்லையா என கண்டறியவே பலமணி நேரம் செலவழிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பலர் பயந்துகொண்டு இருந்தனர்.
இந்நிலையில் 10 நிமிடத்தில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் வகையில் ரேபிட் டெஸ்ட் கிட் என்ற கருவியை அனைத்து மாநில அரசுகளும் வாங்கிய வண்ணம் உள்ளன.
இதே ரேபிட் தமிழக அரசு மத்திய அரசிடம் 25000 கிட் வாங்கியுள்ளது. ஆந்திராவில் இதுவரை 572 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.