பசிக்காக கரு நாக பாம்பை வேட்டையாடிய இளைஞர்கள்; தீர்ந்த பசி; வந்தது வினை , சாப்பாடு இல்லாததால் பாம்பை வேட்டையாடி தின்ற அருணாச்சல் பிரதேச இளைஞர்கள் கைது.
அருணாச்சல் பிரதேச இளைஞர்கள் காட்டிற்குள் சென்று கரு நாகப் பாம்பை வேட்டையாடி அதை போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
நாடே ஊரடங்கில் இருக்கும் நேரத்தில் இது போன்ற சேட்டை செயல்கள் பெரும்பாலானோர் செய்து வருகின்றனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் தவளை மற்றும் பூச்சிகளை உண்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போது அருணாசலப் பிரதேசத்தில் மூன்று இளைஞர்கள் பாம்பை வேட்டையாடி சமைத்து சாப்பிட முயன்றுள்ளனர்.
அவர்கள் கருநாகத்துடன் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனதால் போலீஸ் வலையில் சிக்கினார்கள். இவர்களை போலீஸ் கைது செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாகப் பேசிய அந்த இளைஞர்கள், `சாப்பாட்டுக்கு அரிசி இல்லாத காரணத்தால் காடுகளில் உணவுக்காகத் தேடி அலைந்ததாகவும், அதன்பிறகு இந்தப் பாம்பை உணவுக்காக வேட்டையாடியதாகவும்’ கூறியுள்ளனர்.
அனைத்து மாநிலங்களுமே மக்களுக்கு வேண்டிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் இரண்டு மாதங்களுக்கு இலவசமாக கொடுத்து வரும் நிலையில் அதையே தான் அருணாச்சல பிரதேச மாநிலமும் கூறியுள்ளது.