ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள்: பாஜக இருக்கும் வரை விடுதலை இல்லை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழர்கள் ஏழு பேர் மீது தண்டனை விதிக்கப்பட்டது.
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயகுமார், ராபார்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் நீண்ட வருடமாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்யவேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. பலர் இவர்கள் விடுதலைக்காக போராடி வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் ஜெயலலிதா, இவர்கள் 7 பேரை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக அறிவித்தார். ஆனால், அதற்கு அப்போதைய மத்தியஅரசு முட்டுக்கட்டையிட்டது.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் மீண்டும் தீர்ப்பு வழங்கியது.
அதன்பிறகு, அமைச்சரவைக் கூட்டத்தில், 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்தது.
ஆனால் இதுவரை ஆளுநர் மாளிகை இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சுப்ரமணிய சுவாமி ஒரு கருத்துக் கூறியுள்ளார்.
பாஜக ஆட்சி மத்தியில் இருக்கும் வரை ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.