Home நிகழ்வுகள் இந்தியா சாலை, ரயில் என அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

சாலை, ரயில் என அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

403
0

சாலை, ரயில் என அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

இன்று காலை மும்பை தானே நகரின் அருகே உள்ள காஷ்மிரா சாலையில் ஒரு திறன் குறைந்த குண்டுவெடித்தது.

அடுத்த சிலமணி நேரங்களில் கான்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் கழிவறையில் திறன் குறைந்த குண்டு வெடித்துள்ளது.

கான்பூர் – பிவானி வழித்தடத்தில் இயங்கும் கலிந்தி எக்ஸ்பிரஸ் இன்று இரவு ஏழு மணியளவில் பரஜ்பூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, ரயில் கழிவறையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

திறன் குறைந்த குண்டு என்பதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. கழிப்பறை மட்டும் சேதமடைந்தது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாம் ஸ்குவாடுகளால் முற்றிலும் ரயில் தீவிர சோதனை செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.

Previous articleராஜாவுக்கு சீட்டா? தமிழிசை-எச்.ராஜா மோதல்!
Next articleமூன்றாவது அணியில் இந்தக் கட்சிகள் கூட்டணியா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here