ராஜாவுக்கு சீட்டா? தமிழிசை-எச்.ராஜா மோதல்!
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு, அதிமுக கட்சி 5 சீட் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் அந்த ஐந்து சீட்டில் போட்டியிட பாஜக கட்சியினர் அடிதடியில் ஈடுபட்டு உள்ளனர்.
எச்.ராஜா தரப்பு சீட் குடுத்தே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கின்றனராம். ஆனால் தமிழிசைக்கு அதில் விருப்பம் இல்லை.
எச்.ராஜா பண்ணிய வேலைக்கு சீட் கொடுத்தால் நோட்டவைக்கூட முந்த முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் எச்.ராஜா தரப்பு தமிழிசைக்கு சீட் தரக்கூடாது எனப் பிடிவாதமாக உள்ளனர். இதனால் பாஜகவிற்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.