Corona in Indian Navy : இந்திய ராணுவத்துறையின் ஒரு பகுதியான கப்பற்படையில் கொரோனா தாக்கம் இருப்பதாக உறுதிசெய்துள்ளனர்.
மும்பையில் இயங்கிவந்த கப்பற்படையில் 21 பேருக்கு கொரோனாதொற்று இருப்பதாக கடற்படை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
இவர்களை தவிர வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை என்றும், இந்த தொற்று மேலும் பரவாமல் இருக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாவும் கூறினார்.
இந்திய சுகாதாரஅமைப்பு வெளியிட்டுள்ள நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 11906 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 480 பேர் இறந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதுபற்றி கடற்படை தலைமை அதிகாரி கூறுகையில், பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியில் கொரோனா பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்ததால் இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும் அந்த 21 பெரும் ஒரே குடியிருப்பில் தங்கியிருந்ததால் அந்த குடியிருப்பு தற்போது முற்றிலுமாக மூடப்பட்டு CONTAINMENT ZONE ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.