oklahoma bomb blast : உலகெங்கிலும் பல இடங்களில் கொடூரமான தீவிரவாத சம்பவங்கள் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
இப்படி நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு பல நாட்டு மக்கள் ரகசியமாக உதவினாலும், வரலாற்றில் ராணுவ அதிகாரியே உதவிய சம்பவம் இன்றுதான் நடந்துள்ளது.
1995ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி, அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம்தான் அது.
இந்த சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆனாலும் அமெரிக்காவின் பல மக்களுக்கு இன்றும் இது மீளமுடியாத சம்பவமாகவே உள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரியான ஒருவர், பயங்கரமான வெடிப்பொருள்கள் நிரம்பிய ஒரு காரினை எடுத்துக்கொண்டு ஒக்லஹோமாவின் பெடரல் கட்டிடம் முன்பு வெடிக்க செய்தார்.
இந்த சம்பவத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பல கொடூரமான காயங்களுடனும், 168 பேர் இறந்தும் போயுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட பலருக்கு பல வித்தியாசமான கதைகள் இருந்தாலும், தற்போது இதிலிருந்து மீண்டு பலரது வாழ்க்கை மாறியுள்ளது.
வரலாற்றில் கொடிய நாளான இன்று, பல அமெரிக்க மக்கள் மெழுகுவர்த்தி மூலம் தங்கள் இரங்கல்களை தெரிவிப்பது வழக்கமான ஒன்று.