தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லீம்களே நாட்டின் பல்வேறு பகுதியில் கொரோனாவை பரப்பிவிட்டனர் என்பது போல் நேரடியாக முஸ்லீம் மதத்தை குறிப்பிட்டது மத்திய அரசு.
இதன் விளைவாக குல்லா அணிந்து வெளியில் நடமாடுபவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறி வருகிறது.
இரண்டு முஸ்லீம்கள் தப்லீக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும், கொரோனாவை பரப்ப வந்தவர்கள் என நினைத்தும் வட இந்திய பொதுமக்கள் அவர்களை தாக்கியுள்ளனர்.
நீண்ட நேரம் கை கூப்பி எங்களை விட்டுவிடுங்கள் எனக் கூறும் அந்த இஸ்லாமியர்கள் பெரிய கம்பை கொண்டு மிரட்டுகின்றானர்.
அதுவரை உள்ள வீடியோ மட்டுமே வெளியாகியுள்ளது. அதன்பிறகு அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர் என வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று யோசிக்காமல் யார் மீது பழி போடலாம் என நினைக்கும் அரசின் போக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.