வடகிழக்கு டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டருக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளது. அவரிடம் 800 பேர் வைத்தியம் பார்த்துள்ளனர்.
ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் மருத்துவம் பார்க்க வேண்டும் என ஆம் ஆத்மி அரசு வடகிழக்கு டெல்லியில் மஜ்பூர் பகுதியில் மொஹெல்லா கிளினிக் நிறுவப்பட்டது.
இங்கு கடந்த 12 தேதி சவூதி அரேபியாவில் இருந்து வந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்று உள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது தெரியாமல் அங்கு இருந்த டாக்டர் வைத்தியம் பார்த்துள்ளார்.
இதன் காரணமாக டாக்டருக்கும் பரவி உள்ளது. இதை அறியாத டாக்டர் மார்ச் 12 முதல் 18 வரை கிட்டத்தட்ட 800 பேருக்கும் மேல் வைத்தியம் பார்த்து உள்ளார்.
அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவி, குழந்தைக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் அவரிடம் பரிசோதனைக்கு வந்த 800 பேரையும் அரசு கண்டறிந்து அவரவர் வீட்டிலேயே தனிமை படுத்தி வைத்து உள்ளனர்.