coronavirus awareness 2020 | கொரோனா விழிப்புணர்வு : எது கொடியது வைரஸா? வதந்தியா?
coronavirus awareness 2020 : உலகத்தில் உடனுக்குடன் செய்திகளையும், கருத்துக்களையும், வதந்திகளையும், பகிர சமூக வலைதளங்கள் சுமுகமாக பயன்படுகிறது.
இதில் முக்கியமாக வதந்திகளை உடனுக்குடன் பகிர்வதில் நாம் மக்கள் யோசிப்பதே இல்லை
‘நான் எப்படா அப்படி பண்ணேன்னு’ கொரோனாவே யோசிக்கும் அளவுக்கு நம் மக்களில் ஒரு சிலர் வேண்டாத வதந்தியை பரப்பி வருகிறார்கள்.
இதனால் பாதிப்படைவது நாமும் நம் நாட்டு மக்களுமே என்பதை உணராமல் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
உங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தேவையில்லாத வதந்திகளை பரப்பும் பக்கங்களை பின் தொடர்வதை இன்றிலிருந்து நிறுத்தி தவிர்த்துக் கொள்வது நோயை விட மிகவும் நல்லது.
இன்னும் coronovirus நோய்க்கு தடுப்பு மருந்து, குணமாக்கும் மருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கவில்லை.
தமிழரின் பாட்டி வைத்தியம் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி போன்ற சில லேகியங்களை அரைத்து குடித்தால் சரியாகிவிடும் என்று சிலர் வீடியோக்களில் பரப்பி வருகிறார்கள்.
தயவு செய்து அதையெல்லாம் தவிர்க்கவும். நமக்கு அந்த நோய் அண்டாமல் இருக்க நம்மை நாமே சுத்தமாக வைத்துக் கொண்டு வெளியில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும்.
இந்த நாட்டில் இத்தனை இழப்பு, அந்த நாட்டில் அத்தனை இழப்பு, இந்த நாட்டில் இத்தனை பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள், அந்த நாட்டில் அத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி செய்திகளைச் சொல்லும் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற வலைதளங்களில் உள்ள பக்கங்களை கண்டிப்பாக தவிர்க்கவும்.
நாம் முதலில் மன தைரியத்துடன் இருந்தால் மட்டுமே எதையுமே எதிர்கொள்ள முடியும்.
கோழி சாப்பிட்டால் கொரோனா வரும், மீன் சாப்பிட்டால் கொரோனா வரும் என்று சொல்பவர்கள் பேச்சை கண்டிப்பாக தவிர்க்கவும்.
மக்கள் தொகையில் இரண்டாமிடம் உள்ள இந்தியா மற்றும் நாட்டை காட்டிலும் பாதிப்புகள் மிகவும் குறைவே. அதுவே நமக்கு மிகப்பெரிய பலம்.
நம்முடைய மருத்துவர்களும் செவிலியர்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வீண் வதந்திகளை நம்பி மற்றவர்களிடம் குரலில் பேசுவதை
இதில் மிக முக்கியமான ஒன்று நம்மூரில் பாதிக்கப்படாத ஒருவரை நோய் பாதித்துவிட்டது என்று நாமலே நம்பி மற்றவருடன் பகிர்வதை முதலில் தவிர்த்துக் கொண்டாலே வதந்திகள் பரவுவதை தடுக்கலாம்.