Home சினிமா கோலிவுட் அய்யோ அது நான் இல்ல: டிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்!

அய்யோ அது நான் இல்ல: டிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்!

898
0
Tik Tok Elakkiya

Tik Tok Elakkiya; அய்யோ அது நான் இல்ல: டிக் டாக் புகழ் இலக்கியா புகார்! டிக் டாக் மூலம் பிரபலமான இலக்கியா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகலத்தில் புகார் அளித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் எத்தனையோ பேர். இவ்வளவு ஏன், யூடியூப் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தவர்களும் இருக்கிறார்கள்.

அப்படியிருக்கும் போது தற்போது டிக் டாக் மூலம் பலரும் டிரெண்டாகி அதன் மூலம் சினிமா வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், டிக் டாக் மூலம் பிரபலமானவர்கள் எத்தனையோ பேர் இருக்க அதில் முக்கியமானவராக இருப்பவர் இலக்கியா.

ஆடல், பாடல் பற்றாக்குறைக்கு கிளாமர் உடை என்று இவர் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. அதோடு லைக்ஸும், ஷேரும் சொல்லவே வேணாம்.

அந்தளவிற்கு பிரபலமாகி வருகிறார். ஆனால், அதுவே அவருக்கு வினையாகி வருகிறது.

ஆம், இலக்கியா என்ற பெயரில் போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம், ஆசை வார்த்தை கூறி பணம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அறிந்த இலக்கியா அது நான் இல்லை என்று கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளுக்கு:நல்ல மாணவர்களை சமுதாயத்தில் உருவாக்குவேன்: ஒரு ஆசிரியரின் சபதம்!

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியிருப்பதாவது: டிக் டாக்கில் எனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கியுள்ளனர். அதை தவறாக பயன்படுத்தி பணம் வசூலித்ததாகவும் தன் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

எனக்கு தேவையான அனைத்தும் என்னிடம் இருக்கும் போது, நான் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. டிக் டாக் மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமிலும் எனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கி யாரோ தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார். இது ஒரு புறம் இருக்க, படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும், சிறிய படங்களில் நடித்த போது கூட அவர்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் நடித்ததாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக அவர் யோகி பாபு நடிப்பில் வந்த ஜாம்பி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articlenirbhaya convicts: ஓடும் பஸ்; நிர்பயாவை கதற வைத்தவர்கள்; சில மணி நேரத்தில் கதம் கதம்
Next articleகொரோனா விழிப்புணர்வு; எது கொடியது – வைரஸா? வதந்தியா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here