ராகுல் காந்தி: கொரோனாவை குறைத்து எண்ணுகிறார்கள்
சீனாவில் தொடர்ந்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆல் இந்தியாவில் இது வரை 150க்கு மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொரோனாவிற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
கொரோனா போன்ற கிருமிகளை நம் முன்னோர்கள் எப்படி ஓட ஓட விரட்டினர்
இவர்கள் செயல்படும் வேகம் போதாது. கொரோனாவை குறைத்து மதிப்பிட்டால் அதற்கு அதிக விலை கொடுக்கும் நேரம் வரலாம் என கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் 220000 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ் மற்றும் 8900 இறப்புகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 150க்கும் மேற்பட்ட கேஸ், மற்றும் 3 இறப்புகளை நிகழ்ந்துள்ளன.
மக்கள் கூடுவதை குறைக்கும் வகையில் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் விடுமுறை அறிவித்துள்ளது மத்திய அரசு. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் போன்றவற்றும் மூட மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு இட்டுள்ளது.மார்ச் 31 தேதி வரை அனைத்தும் மூடி இருக்க வேண்டும் என்று என்று மத்திய அரசு மாநில அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.