Home நிகழ்வுகள் இந்தியா இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நீடிப்பு

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நீடிப்பு

கொரோனா ஊரடங்கு

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் அகமெதாபாத் ஆகிய நகரங்களை மத்திய அரசு கொரோனா அதிகம் பரவும் சிகப்பு மண்டலங்களாக அறிவித்து இருந்தது.

இதை அடுத்து மே 3 இல் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது இன்னிலையில் நாடுமுழுவதும் மே 18வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 203 தொற்று

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 203 உயர்ந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 2,526 ஆக உயந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் மராட்டியம் தொடர்ந்து 10,498 பாதிப்புடன் முதல் இடத்தில் உள்ளது  அதைதொடர்ந்து குஜராத் 4,395 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்திலும், டெல்லி 3,515 பாதிப்புகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா ஊரடங்கு முடிந்த பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆலோசிக்க அமைச்சர்களை காணொளிக்காட்சி மூலம் சந்தித்தார்.

மத்திய அரசு நடவடிக்கைகள்

மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் இருப்பவர்களை இரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கலாம், அதற்கான நடவடிக்கைகளை இரயில்வேதுறை மற்றும் சம்பந்தபட்ட மாநிலங்கள் எடுக்க வேண்டும் என அறிவித்தது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளிகிழமை வரை 35,365 ஆக உள்ளது மற்றும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,152 ஆக உள்ளது, என சுகாதாரத்துறை தெரிவித்தது.

முப்படை தளபதிகள் சந்திப்பு

இந்த நிலையில் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர், இராணுவம், வான்படை, கப்பற்படை ஆகியவற்றின் தளபதிகள் கூட்டாக சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராவத் பதவி ஏற்றபின் நடக்கும் முதல் கூட்டு சந்திப்பு இது என தெரிவித்தனர்.

உலக அளவில் கொரோனா
உலக அளவில் 3,309,002 மக்கள் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 234,142 ஆக உள்ளது.

Previous articleபரிமுதல் செய்த மது பாட்டில்களை அப்புறபடுத்த உத்தரவு, உயர்நீதிமன்றம்
Next articleஉலக அளவில் இலட்சக்கணக்கான குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து, ஐ.நா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here