புதுடெல்லி: ‘நிசர்கா’ புயல் கன மழை மற்றும் ஒரு மைலுக்கு 100 முதல் 110 கிமீ வேகத்தில் காற்றுடன் புதன்கிழமை மராட்டியத்தில் கரையை கடக்கும். மும்பை மற்றும் மற்ற கடற்கரை ஓர பகுதிகளில் ஒரு மைலுக்கு 120 கிமீ வேகத்தில் சுழல்காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
கொரோனாவுடன் சேர்ந்தது ‘நிசர்கா’ புயல்
ஏற்கனவே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மாராட்டியம் மற்றும் குஜராத் ஆகியன இருக்கையில் ‘நிசர்கா’ புயலால் இம்மாநிலங்களின் நிலைமை மேலும் சிக்கலில் உள்ளதாக தெரிகிறது.
“ஆரபிக் கடலில் உருவாகியுள்ள ‘நிசர்கா’ புயல் அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுபெற அதிக வாய்ப்புகள் உள்ளது,” என வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் கே.எஸ்.கொசாலிகர் ட்விட்டரில் தெரிவித்தார்.
மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே ‘நிசர்கா’ புயலின் வருகையால் அம்மாநில மக்களை பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
குஜராத்திலும் பாதிப்பு இருக்கும்
குஜராத்தில் கடலோர பகுதிகலில் வசிக்கும் 78,000 மக்களை அப்புறபடுத்த மொத்தம் 19 தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.