புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத்தின் உறுப்பினரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அடிஷி மர்லேலா விற்கு புதன் கிழமை கொரோனா தொற்று உறுதி.
அந்த கட்சியில் அக்சய் மராதே மற்றும் ஆலோசகர் அபிநந்திதா தயால் மாதூர் ஆகியயோருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சுய தனிமைபடுத்தலில் வீட்டில் உள்ளார்
கால்காஜி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கபட்டவர் அடிஷி மர்லேலா, தற்போது சுய தனிமைபடுத்தலில் தனது வீட்டில் குணமடைந்து வருகிறார்.
செவ்வாய் கிழமை சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் கொரோனா அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. இருப்பினும் புதன் கிழமை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை.
டெல்லி கொரோனா தொற்றில் மூன்றாவது இடம்
நாட்டிலேயே டெல்லி கொரோனா தொற்றில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை 45,000 பேர் கொரோனாவால் பாதிப்பிற்கு உள்ளாகி இறுக்கின்றனர்.
1837 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். தற்போது வரை 23,000 பேர் அவர் அவர் வீட்டில் தனிமைபடுத்தலில் உள்ளனர்.