புதுடெல்லி: சனிக்கிழமை புதிதாக 6 கொரோனா கட்டுபாட்டு மையங்கள் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள மொத்த கொரோனா கட்டுபாட்டு மையங்களின் எண்ணிக்கை 92ஆக உயர்ந்துள்ளது.
புதிய கொரோனா கட்டுபாட்டு மையங்கள்
டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சன்லைட் காலனியில் உள்ள வீட்டு எண் 23இல் இருந்து 156, வீட்டு எண் 15 முதல் 191 மற்றும் வீட்டு எண் 230 முதல் 233 ஆகியன கொரோனா கட்டுபாட்டு மையமாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுளது.
வடக்கு டெல்லியில் ஜஹாங்கிர்பூரி பகுதி ஈ2(E2) மற்றும் ஈஈ(EE) அகியன கட்டுபாட்டு மையங்களாக(Containment zones) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசாத்பூரில் உள்ள லால்பாக் என்னும் எடத்தில் வீட்டு எண் 690 மற்றும் பட்த்திலியில் உள்ள எண்-116 ஜேஜே (N-116 JJ)முகாம் ஆகியவை கட்டுபாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வடமேற்கு டெல்லியில் நஹர்பூர் கிராமத்தில் உள்ள வீட்டு எண் 92 முதல் 212 வரை மற்றும் மங்கொள்பூரி என்னும் இடத்தில் உள்ள பகுதி சி(Block C) ஆகியவை இருவேறு கட்டுபாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
உள்ளே நுழையவும் வெளியில் செல்லவும் தடை
“ஒவ்வொரு கட்டுபாட்டு மண்டலங்களில் இருந்தும் 3க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. அனைத்து பகுதிகளும் மூடப்பட்டுள்ளன மற்றும் யாரும் கட்டுபாடுகளை மீறாதவகையில் உள்ளே நுழையவும் வெளியில் செல்லவும்
தடைவிதிக்கப்பட்டுள்ளது/” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டெல்லி அரசு இதுவரை 34 கட்டுப்பாட்டு மண்டலங்களை தளர்த்தியுள்ளது.