Home நிகழ்வுகள் இந்தியா நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான ₹.1,350 கோடி வைரங்கள், முத்துக்களை அமலாக்கத்துறை ...

நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான ₹.1,350 கோடி வைரங்கள், முத்துக்களை அமலாக்கத்துறை மீட்டது

முத்துக்களை அமலாக்கத்துறை

புதுடெல்லி: புதன் கிழமை நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியவர்களுக்கு சொந்தமான 2,300 கிலோ கிராம் அளவிற்கு பட்டைத்தீட்டப்பட்ட வைரங்கள் மற்றும் முத்துக்களை அமலாக்கத்துறை ஹாங்காங்கில் இருந்து மீட்டு கொண்டுவந்தது. இவைகளின் மதிப்பு சுமார் 1,350 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து மும்பைக்கு வந்த சரக்குகள்

வெளிநாட்டிலிருந்து மும்பைக்கு வந்தடைந்த 108 சரக்குகளில் 32 நிரவ் மோடிக்கும் மீதம் மெகுல் சோக்சிக்கும் சொந்தமானதாக கருதப்படுகிறது.

வங்கியில் பண மோசடி வழக்கு

இரண்டு தொழிலதிபர்களும் அமலாக்கத் துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மும்பை பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 2 பில்லியன் டாலர் அளவுக்கு மோசடி செய்தது தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின்(PMLA) கீழ் தேடப்பட்டு வருகிறார்கள்.

1,350 கோடி விலை மதிப்பு மிக்க வைரங்கள் மற்றும் முத்துக்கள்

மீட்டு கொண்டுவரப்பட்ட பட்டைத்தீட்டப்பட்ட வைரங்கள், முத்துக்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் மதிப்பு சுமார் 1,350 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

சட்டபூர்வமான நடவடிக்கை

ஹாங்காங்கில் இருந்து இந்த விலை மதிப்புமிக்க பொருட்களை இந்திய கொண்டுவர அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்(PMLA) இவை அனைத்தும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here