பெங்களூரு: புதன்கிழமை காமாக்சிபால்யா என்ற இடத்திற்கு அருகில் உள்ள ரங்கனாதபுரத்தில் வயதான தம்பதிகள் வாடகை வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இறந்தவர்கள் மைசூரில் இருந்து வந்து வசிக்கும் முதிய தம்பதிகள்
இறந்தவர்கள் மைசூரில் இருந்து வந்து வசிக்கும் நரசிம்ம ராஜூ வயது 70 மற்றும் அவரது மனைவி சரஸ்வதி 64 என தெரியவந்தது. இதில் ராஜூ திருமணத் தரகர் மற்றும் சரஸ்வதி ஆசிரியை என்பதும் தெரியவந்தது.
சம்பவம் குறித்து காவல் துறை தெரிவிக்கையில் இறந்தவர்களின் மகன் சந்தோசை காணவில்லை எனவும் அவரது கைப்பேசி அணைக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
சந்தோஷ் இறந்தவர்களின் ஒரே மகன் என்பதும் இவரது மனைவி பிரசவத்திற்காக பிறந்தவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கு உரிய வகையில் காணாமல் போன மகன்
“நாங்கள் சந்தோஷ்தான் குற்றவாளி என்று தெரிவிக்கவில்லை ஆனால் சந்தேகத்திற்கு உரிய வகையில் அவரை காணவில்லை. அவரை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது,” என காவல் துறை தெரிவித்தது.
காவல்துறை தெரிவிக்கையில் “இருவரும் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், இந்த கொலையை இவர்களது மகன் சந்தோஷ் செய்திருக்க வாய்புகள் உள்ளதாகவும், உடற்கூறு பரிசோதனை செய்தால் உண்மைகள் தெரியவரும் எனவும் தெரிவித்தனர்”
உடல்கள் விக்டோரியா மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும். இறந்தவர்கள் செவ்வாய்கிழமை கொலை செய்யப்பட்டிருக்க வாய்புகள் உள்ளது எனவும் தெரிவித்தனர்.