Home Latest News Tamil ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்கூட்டர் அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு

ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்கூட்டர் அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு

518
0
ப்ளஸ் 1

ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்கூட்டர் அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு R15, FZ, BULLET என முரட்டு பைக்குகளுடன் செல்கின்றனர்.

லைசன்ஸ் எடுக்கும் வயதைக்கூட தாண்டுவதில்லை. பெற்றோர்கள் வசதி படைத்தவர்கள் என்பதால் உடனே பைக் வாங்கிக்கொடுத்து விடுகின்றனர்.

இதனால் பலர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப வேகமாக பைக் ஒட்டி பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தொழில்நுட்ப வளர்ச்சியின் பெருக்கத்தை கண்டும் மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

16 முதல் 18 வயது உடையவர்கள், கியர் இல்லாத மின்சார வாகனங்களை ஓட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது

16 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். வாகனம் 50 சிசிக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.  கியர் இல்லா மின்சார வாகனமாக இருக்க வேண்டும்.

இந்த தகுதி உடையவர்கள் லைசன்ஸ் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Previous articleசூட்டைக் கிளப்பிய ஓவியா; சென்சார் அதிகாரிகள் அதிர்ச்சி
Next articleடீ குடிப்பதால் ஏன் மூளை சுறுசுறுப்பாகிறது?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here