அமெரிக்காவை சார்ந்த பிரபலமான சமூக வலைதமான பேஸ்புக் (முகப்புத்தகம்) ரூ.43,574 கோடிகளை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிளேட்பார்ம் லிமிடட்ட இல், முதலீடு செய்து 9.9% பங்குகளை வாங்கியது.
இந்த இரண்டு நிறுவங்களும் தனித்தனியாக கூறியிருப்பதாவது, சில முக்கிய திட்டங்களில் இரு நிறுவனமும் இனைந்து செயலாற்ற இருப்பதாகவும், இதனால் இந்திய மக்கள் வர்த்தக ரீதியில் புதிய வாய்புகளை பெறுவார்கள் எனவும் அறிவித்து உள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட், ஜியோ பிளேட்பார்ம் லிமிடட் மற்றும் பேஸ்புக் நிறுவனம், இன்று அறிவிக்கையில் “ரூ.43,574 கோடியை பேஸ்புக் நிறுவனம் ஜியோ பிளாட்பார்மில் முதலீடு செய்ய ஒப்பந்தங்களை கையெழுத்திட்டடு உள்ளது”, என புதன்கிழமை ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
ரிலையன்ஸ் ஜியோவில் மொத்தம் 38.8 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொந்த துணை நிறுவனங்களில் ஒன்றாகவே இருக்கும்.
புதன் கிழமை காலையில் ரிலையன்ஸ் பங்கு 6.8% உயர்ந்து ரூ.1,320.55 BSE ஆக இருந்தது.
பேஸ்புக் நிறுவனம் இந்த ஒப்பந்தம் குறித்து கூறுகையில் , “ இந்தியா தங்களுக்கு 32.8 கோடி மாத பயணாளிகள் உள்ள மிகப்பெரிய சந்தை எனவும் தங்களது இனொரு தகவல் தொடர்பு செயலியான வாட்சப்பிற்கு(whatsapp) 40கோடி வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் தெரிவித்தது.
மேலும் இந்த ஒப்பந்தம் 6 கோடி ஆக உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள், 12கோடி உழவர்கள் மற்றும் 3கொடி சிறு வியாபாரிகள் மற்றும் லட்சக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர நிறுவங்களுக்கு மின்னனு அடிப்படியிலான தீர்வுகளை வழங்குவதில் கவனத்தை செலுத்தும் என குறிப்பிட்டது.