தேர்வு வைக்காமல் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க இருக்கும் மாநிலம், கொரோனா பரவாமல் பாதுகாக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு வைக்காமல் தேர்ச்சி அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை
மார்ச் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்ட தேர்வுகள் மாணவர்கள் நலத்தை கருத்தில் கருத்தில் கொண்டு கைவிடப் பட்டதாக கல்வி முதன்மையாளர் ரேணுகா குமார் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா முன் எச்சரிக்கையால் நாடு முழுவதும் அனைத்து திரை அரங்குகள், பொது இடங்கள், மால் போன்ற மக்கள் கூடும் இடங்கள் ஏப்ரல் 2ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.