ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 5 தீவிரவாதிகள் ஞாயிறு அன்று பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர் என காவல் துறை தெரிவித்தது.
மறைந்திருந்த தீவிரவாதிகள்
பாதுகாப்பு படையினரின் தேடுதல் நடவடிக்கை ஒன்றின் பொழுது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட தொடங்கினர். இதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பிற்கான சீருடையை அணிந்திருந்தனர் என கூறப்படுகிறது. அதில் ஒருவன் தீவிரவாத தளபதி எனவும் தெரியவந்துள்ளது.
குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் இருந்தால் அடையாளம் காட்டலாம்
எந்த குடும்பத்திற்காவது கொல்லப்பட்ட நபர்களில் நெருக்கமானவர்கள் இருந்தால் அடையாளம் காட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அயுதங்கள் கைபற்றப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.