Home நிகழ்வுகள் இந்தியா 1000த்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மரியல்: குஜராத்

1000த்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மரியல்: குஜராத்

1000த்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சாலை

ராஜ்கோட்: தங்களை உத்திரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு அழைத்துசெல்ல வேண்டிய தொடர்வண்டி இரத்து செய்யப்பட்டதால் கண்ட்லா-காந்திதாம் (Kandla-Gandhidham)  நெடுஞ்சாலையில் 1000த்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மரியலில் ஈடுபட்டனர் மற்றும் காவலர்கள் மீது கற்களை கொண்டு தாக்கினர்.

தாங்கள் செல்ல வேண்டிய தொடர்வண்டி இரத்து செய்யப்பட்ட செய்தியை கேட்ட தொழிலாளர்கள் கோபமடைந்தனர், மாவட்ட நிர்வாகம் எந்த சரியான பதிலும் தெரிவிக்காததால் மேலும் கோபமடைந்தனர்.

பெரியகற்களை வைத்து சாலை மரியல்

கோபமுற்ற வெளிமாநில தொழிலாளர்கள் கண்ட்லா-காந்திதாம் நெடுஞ்சாலையில் ஒன்று கூடினர் மற்றும் சாலையில் பெரிய கற்களை வைத்து சாலை மரியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் மீது கற்களை கொண்டு எறிந்தனர்.

“இருப்பினும், நாங்கள் அவர்கள் மீது எந்த சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை மற்றும் அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் சொந்த ஊருக்கு (உத்தர பிரதேசம்) போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்து, அவர்களை வெளிமாநில தொழிலாளர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பிவைத்தோம்,” என காந்திதாம் பி பிரிவு காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here