Home நிகழ்வுகள் இந்தியா போயிங் 737 மேக்ஸ்-8, ரக விமானங்களுக்குத் தடை விதித்த இந்தியா

போயிங் 737 மேக்ஸ்-8, ரக விமானங்களுக்குத் தடை விதித்த இந்தியா

354
0

போயிங் 737 மேக்ஸ்-8, ரக விமானங்களுக்குத் தடை விதித்த இந்தியா

எதியோபியாவில் இந்த ரக விமானங்களைக் கொண்டு ஏற்பட்ட விபத்தால் 157 பேர் உயிரிழந்தனர். இதனால் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் உலக நாடுகள் புறக்கணித்தது.

விபத்தைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ்-8′ ரக விமானங்கள் மீதான பாதுகாப்பு அச்சம் எழுந்தது. எனவே, இந்த ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கும்படி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டது.

இந்த ரக விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம் என அமெரிக்கா விமானங்களைத் தரை இறக்கியதை தொடர்ந்து இந்தியாவும் தரை இறக்கியது.

இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்கு முறை இந்த ரக விமானங்களைக் கூடுதல் பாதுகாப்பு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளது.

ட்விட்டர் பக்கத்தில் பயணிகள் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் உலக விமான உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் 13-றும்  ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 5-தும் வைத்துள்ளது.

விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போய்ஸ் நிறுவனம் எத்தியோப்பியா விமான விபத்து குறித்து விசாரணையைத் துவங்கி உள்ளதாகவும், தொடக்க நிலையில் விசாரணைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here