Home நிகழ்வுகள் இந்தியா இந்திய பல் மருத்துவர் கொரோனா சிகிச்சையின் போது இறப்பு: குவைத்

இந்திய பல் மருத்துவர் கொரோனா சிகிச்சையின் போது இறப்பு: குவைத்

கொரோனா சிகிச்சையின் போது

துபாய்: குவைத்தில் இந்திய பல் மருத்துவர் கொரோனா பாதிப்பால் இறந்தார், இது அந்த நாட்டில் இரண்டாவது மருத்துவ துறை சார்ந்த இறப்பாக கருதப்படுகிறது. இறந்தவர் டாக்டர் வாசுதேவ ராவ் ,54 சனிக்கிழமை ஜாபர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையின் போது இறந்தார் என தெரியவந்துள்ளது.

15 வருடமாக குவைத்தில் உள்ளவர்

ராவ் 15 வருடமாக குவைத் நாட்டில் குடியிருந்து வருகிறார், இவர் குவைத் எண்ணெய் நிறுவனத்தில் பல் மருத்துவராக பணியாற்றி வந்திருக்கிறார் இந்த நிறுவனம் குவைத் நாட்டின் அரசு பெட்ரோல் நிறுவனத்தின் துணை நிறுவனமாக கருதப்படுகிறது.

ராவ் குவைத்தில் உள்ள இந்திய பல் மருத்துவ கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த கூட்டமைப்பு அவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தது . வெள்ளிகிழமை குவைத்தில் எகிப்திய வம்சாவளி காது மூக்கு தொண்டை டாக்டரான டரிக் ஹுசைன் மொகெய்மர் என்பவரும் கொரோனாவால் மரணமடைந்தார் இது குவைத்தில் கொரோனாவால் நடந்த முதல் மருத்துவ துறை சார்ந்த மரணமாக கருபப்படுகிறது என வளைகுடா நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குவைத்தில் வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 171 பேர் அரசின் வந்தே மாதரம் மீட்பு நடவடிக்கை மூலம் குவைத்திலிருந்து சென்னை வந்தனர். குவைத்தில் மொத்தம் 8,688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 58 பேர் இறந்தும் உள்ளனர்.

Previous articleஅண்ணாத்த எப்போ வருவார்? அதிரடி அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!
Next articleலவ் தான் ஓகே ஆகியிருக்கு: ராணாவை கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here