மத்திய அரசின் பட்ஜெட்டும்… விமர்சனங்களும்…
ராகுல்காந்தி
மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆசை காட்டி தூண்டில் போடுகிறது. மாதம் ரூ. 500 கொடுக்கப்போவதாக கூறியுள்ளது. இதற்கு மொத்தம் ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும் எனக் கூறப்பட்டு உள்ளது.
15 பேர் வாங்கிய 3.5 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு மட்டும் நாளுக்கு வெறும் 17 ரூபாய் தானா? என விமர்சித்து உள்ளார்.
மன்மோகன் சிங்
வரும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. இது பட்ஜெட் அல்ல.
முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள் போல் உள்ளது. இது தேர்தல் ஓட்டுக்கு கொடுக்கும் லஞ்சம் போன்று உள்ளது என விமர்சித்து உள்ளார்.
மு.க.ஸ்டாலின்
ஒரு பக்கம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த அவசர நடவடிக்கை. மறுபக்கம் விவசாயிகளுக்கு மாதம் 500.
மத்திய அரசு ஏதோ திடிரென விழித்துக்கொண்டு விசாயிகளைக் காப்பாற்றுவதுபோல் நடகாமடுகிறது. இந்த நிதி அறிக்கை மோடிக்கு கொடுங்கனவையாகவே இருக்கும் என விமர்சித்து உள்ளார்.