Home நிகழ்வுகள் இந்தியா இந்தியாவில் பறவைகள் எண்ணிக்கை குறைய காரணம்?

இந்தியாவில் பறவைகள் எண்ணிக்கை குறைய காரணம்?

3
420
இந்தியாவில் பறவைகள் எண்ணிக்கை குறைய காரணம்

இந்தியாவில் பறவைகள் எண்ணிக்கை குறைய காரணம் என்ன? (india birds population decrease) எண்ணிக்கையில் மிகவும் குறைந்த பறவைகள், எண்ணிக்கையில் அதிகரித்த பறவைகள்

கடந்த 25 வருடங்களில் இந்திய நாட்டில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது என சமீபத்திய கணக்கெடுப்பு (report) தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானவை கழுகுகள், சிட்டுக்குருவி, பருந்துகள் மற்றும் கடற்கரையை ஒட்டிய பறவை இனங்கள் இவைதான் அதிகமாக குறைந்துள்ளன.

அதேவேளை, இந்தியாவின் தேசியப் பறவையான மயில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இந்தியாவில் பறவைகள் எண்ணிக்கை குறைய காரணம்

இந்திய பறவைகளின் எண்ணிக்கை குறைய மின்சார கம்பிகளின் மீது மோதுதல், விமானம் மீது மோதுதல், வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு இவை தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

செல்போன் கோபுரங்கள் பறவைகளை பாதிக்கிறது என்று ஒரு புறம் கூறி வந்தாலும் அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

மனிதர்கள் தங்களின் இருப்பிடத்தை காங்கிரட் வீடுகளாக மாற்றிவிட்டனர். இதனால் மனிதன் குடியிருக்கும் வீட்டில் கூடு கட்டி வாழ்ந்த சிட்டுக்குருவி என்னும் பறவை அரிதாகிவிட்டது.

இப்படி ஒரு ஒரு பறவைகள் அழிய எதோவொரு காரணங்கள் உள்ளன. பருவமழை பொய்த்தால் தண்ணீர் இன்றி பறவைகள் அழியும்.

பறவைகள் சரணாலயம் கோடை காலங்களில் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. தண்ணீர் விநியோகம் செய்வதில்லை. இதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதுண்டு.

எண்ணிக்கையில் மிகவும் குறைந்த பறவைகள்

எண்ணிக்கையில் மிகவும் குறைந்த பறவைகள்பருந்துகள், ரிச்சர்ட்டின் பிபிட்

இந்திய கழுகுகள்,

சிட்டுக்குருவி இனவகைகள்

கடற்கரையை ஒட்டிய புறா வகைகள்

கர்லெவ் சண்ட்பைபர்

எண்ணிக்கையில் அதிகரித்த பறவைகள்

 எண்ணிக்கையில் அதிகரித்த பறவைகள்சொளப்பட்சி, சோளக்குருவி

வளர்ப்பு புறாக்கள்

அரிவாள் மூக்கன்

கதிர்க்குருவி, சாம்பல் கதிர்க்குருவி

நீல மயில்

அழிந்து வரும் பறவைகளுக்கு மத்தியில் சில பறவைகள் அதிகமான எண்ணிகையில் பெருகி வருவது சற்று ஆரோக்கியமான விஷயங்களே.

ஏன் பறவைகள் அழிந்து வருகின்றது? அதை எப்படி அழிவில் இருந்து மீட்டெடுப்பது என்பதை பற்றி முறையாக ஆராய்ந்து உலக நாடுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவே சரியான தீர்வு ஆகும்.

ஒரு பறவை இருந்தால் ஓராயிரம் விதைகளை பூமியின் பல்வேறு பகுதிகளில் பரப்பிவிடும். இதனால் காடுகள் உருவாகும். அதன் வாழ்விடம் பெருகும்.

நாம் காடுகளை அழிப்பதும் ஒன்று தான், பறவைகளை அழிப்பதும் ஒன்று தான். அதன் மூலம் மனித இனமும் அழியப்போவதும் உறுதிதான்.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here