பாட்னா/லக்னோ: வியாழக்கிழமை இரண்டு மாநிலங்களில் மின்னல்களால் 31 மாவட்டங்களில் ஏற்பட்ட தொடர் தாக்குதலில் 107 பேர் பலி. பீகாரில் 83 பேரும் மற்றும் உத்திரபிரதேசத்தில் 24 பேரும் பலியாகியுள்ளனர்.
அடுத்த 72 மணிநேரங்களில் அதிக மின்னல்கள்
இதற்கிடையில் அடுத்த 72 மணிநேரங்களில் அதிக மின்னல்கள் தோன்றயிருப்பதால் மக்கள் வீட்டினுள் இருக்கும் படி இரு மாநில மக்களுக்கும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டது.
குடும்பத்திற்கு தலா ₹4 இலட்சம் நிவாரணம் அரசு அறிவித்தது
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் உத்திரபிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மின்னல் தாக்குதலால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹4 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் போதிய தற்காப்புடன் பாதுகாப்பாக இருக்குமாறு நிதிஷ் குமார் மக்களை கேட்டுக்கொண்டார்.