இந்தியாவில் 1 லட்சம் பேர் இறப்பு: இந்தியாவில் சரியான நேரத்தில் லாக்டவுன் பிறப்பிக்கவில்லை எனில் இதுவே இன்றைய தலைப்பு செய்தியாக அமைந்து இருக்கும்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியபடி கொரோனா பாதித்தவர்கள் 7535 பேர். 243 இதுவரை உயிரிழந்துள்ளனர். 655 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மீதமுள் 6637 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இதுவே லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனில் 8 லட்சம் இந்திய மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். 1 லட்சத்திற்கு அதிகமானோர் இறந்து இருப்பார்கள்.
இது நாங்கள் சொல்லவில்லை வெளிநாட்டு அமைப்புகளே கணித்து வெளியிட்டு உள்ளனர். லாக்டவுன் செய்துமே இந்த அளவுக்கு கொரோனா வீரியத்துடன் பரவி உள்ளது.
லாக்டவுன் மட்டும் இல்லை என்றால் இந்தியா இறப்பு எண்ணிகையில் முதலிடத்தில் இருந்து இருக்கும். இத்தாலியை விட பிணக்குவியல் நரகமாக இந்தியா மாறியிருக்கும்.