மும்பை: வியாழக்கிழமை, மாநிலங்கள் அவையில் சட்டசபை நியமனத்திற்க்காக முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரேவை, ஆளுனர் இடப்பங்கீட்டை பயண்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டது.
அன்று தாக்கரே இல்லாத நிலையில் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த இடப்பங்கீட்டில் இரண்டு இடங்கள் ராகுல் நர்வேக்கர் மற்றும் ராம் வாட்குட் ஆகிய இரண்டு பிஜேபி வேட்பாளர்களின் இராஜினாமாவால் ஏற்ப்பட்டவை ஆகும்.
தாக்கரே பதவி ஏற்ற ஆறுமாதங்களுக்குள்ளாகவே சட்டசபை உறுப்பினர் ஆவதில் ஆளுனர் பகத் சிங்க் கோச்யாரி முக்கிய பங்கு வகிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினால் சிவாஜிராவ் கர்ஜே மற்றும் அதிதி நலவாடே, ஆகியோர் வேட்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்டனர்.
ஆனால் அவர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய மூன்றே மாதங்கள் உள்ள நிலையில் ஆளுனர் இடப்பங்கீட்டை கேட்பதை ராஜ் பவன் விரும்பவில்லை.
“ஆளுனர் வேட்ப்பாளரின் ஆறு ஆணடு கால ஆட்சி வரும் ஜூன் 30துடன் நிறைவடைகிறது. இன்னிலையில், தாக்கரேவை சட்டசபை உறுப்பினர் ஆக்குவதை ஆளுனர் தான் முடிவெடுக்க வேண்டும்,” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், ஒருவருடத்திற்க்கும் குறைவான காலமே உள்ளதால் ஆளுனரோ அல்லது குடியரசு தலைவரோ சட்டசபை உறுப்பினராகவோ அல்லது ராஜ்யசபா உறுப்பினராகவோ யாரையும் நியமனம் செய்ய வாய்ப்புகள் இல்லை.
நவம்பர் 27ல் தாக்கரே முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், எந்த ஒரு அவையிலாவது அவர் மே 28 க்கு முன்பாக உறுப்பினர் ஆகியாக வேண்டும்.
ஒன்பது சீட்டுகள் ஏப்ரல் 24லில் காலியாவதைத் தொடர்ந்து தாக்கரே மேல் அவையில் இடம் பெற தேர்ந்தெடுக்க படுவார் என எதிர்பாக்கபட்டது.
இந்த நிலையில் கொரொனா பரவல் காரணமாக தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.