Home Latest News Tamil மோடியை விரட்ட உயிரை விடவும் தயார் – மம்தா

மோடியை விரட்ட உயிரை விடவும் தயார் – மம்தா

408
0
மோடியை விரட்ட

மோடியை விரட்ட உயிரை விடவும் தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை ஒட்டி, பா.ஜ.க.விற்கு எதிராக எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று கூடியது. மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு மேலும் பலர் கலந்து கொண்டனர்.

மம்தா பானர்ஜி கூட்டத்தில் பேசும்போது, பாஜக அரசையும், மோடியையும் மிகவும் ஆவேசமாக தாக்கிப் பேசினார்.

அவர் பேசியதாவது ‘கொல்கத்தா போலீஸ் கமிஷனரை கைது செய்ய, சி.பி.ஐ. அதிகாரிகளை ஏவிய இப்படி ஒரு கீழ்த்தரமான அரசை நான் பார்த்ததே இல்லை.

ஜனநாயகம் இப்போது மோடி நாயகமாக மாறிவிட்டது. மோடியை விரட்டவும், நாட்டின் நலனுக்காவும் எனது கட்சியையும், உயிரையும் தியாகம் செய்ய நான் தயாராக உள்ளேன்.

மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அமையாத வண்ணம் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இணைந்து ஒற்றுமையாகப் பாடுபடுவோம் எனப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here