காதலர் தினத்தில் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ராகுல்காந்தி நாடு முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாடில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்திக்கு சில பெண்கள் மாலை அணிவித்தனர்.
அப்போது ஒரு பெண் ராகுல் காந்தியை வளைத்துப்பிடித்து முத்தம் கொடுத்தார். மேலும் கன்னத்தை தடவி தடவி மகிழ்ந்தார்.
சில நாட்கள் முன் மோடி முன்னிலையில் பாஜக அமைச்சர் ஒருவர் பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். இதை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.
தற்பொழுது இந்த சம்பவத்தை, காதலர் தினத்தில் பெண், ராகுல் காந்திக்கு ப்ரப்போஸ் செய்ததாக பாஜகவினர் கேலி செய்து வருகின்றனர்.