நான்கு வார தனிமைப்படுத்துதலை கடந்தவருக்கு கொரோனா பாதிப்பு, அதிர்ச்சியில் கேரளா மருத்துவர்கள். நான்கு வாரங்களுக்கு பிறகு வெளி வந்த அறிகுறி மொத்த குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு.
துபாயில் இருந்து கேரளா கோழிக்கூடுக்கு வந்த ஒருவர் முதலில் 14 நாட்கள் தனிமையில் இருந்த பிறகு, வீட்டிலும் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டார்.
அது வரை அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. வழக்கம் போல் மருத்துவமனை சென்ற 67 வயதான இவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் பிறகு அவரது குடும்பத்தில் இருந்த அனைவரையும் சோதித்த பொழுது அனைவருக்குமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது உலக மருத்துவ குழுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. எப்படி இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று பரிசோதித்து வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லாவிட்டால் நேரடியாக தங்கள் வீட்டிலேயே 28 நாள்கள் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்
இந்த தனிமைப்படுத்துதல் கால அளவு முடிந்தபின் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுதான்.