Home நிகழ்வுகள் இந்தியா ஊரடங்கால் அதிகரித்து வரும் குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு, கலங்கும் பெண்கள்; அதிர்ச்சி ரிப்போர்ட்

ஊரடங்கால் அதிகரித்து வரும் குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு, கலங்கும் பெண்கள்; அதிர்ச்சி ரிப்போர்ட்

305
0
குடும்ப வன்முறை

ஊரடங்கால் அதிகரித்து வரும் குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு, கலங்கும் பெண்கள்; அதிர்ச்சி ரிப்போர்ட், 7 நாட்களில் பதிவான 300 குடும்ப வன்முறை கேஸ்.

கடந்த 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைய, மீண்டும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பால் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் பலர் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த ஊரடங்கு நேரத்தில் குடும்ப உறவில் இருக்கும் பெண்களுக்கு, குடும்ப வன்முறை உலகம் முழுக்க கூடியிருப்பதாக, புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆண்கள் தனித்திருக்கும் நேரத்தில் மனைவிகளுடன் வெறுப்பை காட்டுவது, சண்டை பிடிப்பது, விருப்பமில்லாமல் பாலியல் தொந்தரவை ஏற்படுத்துவது என பல பிரச்சனைகள் நடந்து வருகின்றனர்.

இந்தியாவில் மட்டுமே, கடந்த மார்ச் 23 முதல் மார்ச் 30 வரையிலான 7 நாட்களில், 291 பெண்கள் குடும்ப வன்முறையில் பாதித்துள்ளதாக, தேசிய பெண்கள் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

தேசிய பெண்கள் ஆணைய கணக்குப்படி, கடந்த ஜனவரியில் 270, பிப்ரவரியில் 302 புகார்கள் வந்துள்ளன. ஆனால், மார்ச் 23 துவங்கி 7 நாட்களில் 291 புகார்கள் வந்துள்ளன.

இதன் மூலம் ஊரடங்கு காலத்தின் குடும்ப வன்முறை தீவிரத்தை அறியலாம். குடும்ப வன்முறையில் பாதிக்கும் பெண்கள், அவசரபோலீஸ் எண் 100க்கு தகவல் தரவும்.

மகளிர்ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள சிறப்பு வாட்ஸ்அப் சேவையை ‘7217735372’ பயன்படுத்தி புகார் அளிக்காலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here