Home நிகழ்வுகள் இந்தியா பத்ம ஸ்ரீ விருது பெற்ற மரங்களின் தாய் சாலுமரத திம்மக்கா

பத்ம ஸ்ரீ விருது பெற்ற மரங்களின் தாய் சாலுமரத திம்மக்கா

403
0
பத்ம ஸ்ரீ

பத்ம ஸ்ரீ விருது பெற்ற மரங்களின் தாய் சாலுமரத திம்மக்கா.

8000 மரங்களுக்கு மேல் வளர்த்த 106 வயது பாட்டி திம்மக்காவுக்கு குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்தால் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருதை பெற்றுக் கொண்ட பாட்டி குடியரசுத் தலைவரை ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினார். இந்தக் காட்சி பார்ப்போர் மனதை நெகிழ்வித்தது.

கர்நாடக மாநிலம் ஹுலிகல் கிராமத்தை சேர்ந்த திம்மக்கா கடந்த 65 ஆண்டுகளாக மரம் வளர்க்கும் பணியை செய்து வருகிறார். இதுவரையில் 8000க்கும் மேற்பட்ட மரத்தை நட்டுள்ளார்.

திம்மக்காவை விட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 33 வயது இளையவர் இதனால் அவரை பாட்டி ஆசிர்வாதம் செய்த காட்சி பார்ப்போர் மனதை நெகிழ்வித்தது.

இந்த நிகழ்வைக் கண்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கரஓசை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திம்மக்கா அவர்கள் மரங்களை வளர்ப்பதற்கு காரணம் அவரின் குழந்தைகளே 40 வயதில் தன்னுடைய குழந்தைகளை வளர்க்க இயலாததால் தற்கொலை செய்ய முயன்றவர்.

இதைத்தொடர்ந்து மரங்களை தன்னுடைய குழந்தைகளாக வளர்க்க ஆரம்பித்து விட்டாராம். மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற சில நேரம் நான்கு கிலோமீட்டர் தூரம் கூட நடந்து செல்வாராம்.

Previous articleகோலியை அவுட் செய்வதே எதிரணிகளுக்கு மிகப் பெரிய சவால் – ஏ‌பி‌டி
Next articleகல்பனா சாவ்லா பிறந்த நாள்: இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here