Home நிகழ்வுகள் இந்தியா 230 சிறப்பு தொடர்வண்டிகளை இயக்க இந்திய இரயில்வே முடிவு, பயணச்சீட்டுகளை ‘தட்கல்’ முறையில் வாங்கிக்கொள்ளலாம் என...

230 சிறப்பு தொடர்வண்டிகளை இயக்க இந்திய இரயில்வே முடிவு, பயணச்சீட்டுகளை ‘தட்கல்’ முறையில் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிப்பு

பயணச்சீட்டுகளை ‘தட்கல்’ முறையில்

இந்திய இரயில்வே துறை தற்போது 230 சிறப்பு தொடர்வண்டிகளை இயக்க இருக்கிறது. அதற்கான பயணச்சீட்டுகளை ‘தட்கல்’ முறையில் இன்று முதல் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் பயணச்சீட்டுகளை பதிவு செய்யலாம்

நாளை முதல் ஓடத் துவங்கும் இந்த சிறப்பு தொடர்வண்டிகளில் பயணம் செய்ய பயணச்சீட்டுகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு இரயில் சேவை 30/06/2020 முதல் துவங்கப்படும்

மத்திய இரயில்வேயின் மூத்த அதிகாரி ட்விட்டரில் “30/06/2020 முதல் துவங்கப்படும் சிறப்பு இரயில் சேவையில் பயணம் செய்ய 29/6/2020 முதல் தட்கால் முறையில் பயணச்சீட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்தார்.

சிறப்பு இரயில் சேவை

கோவிட் பரவலால் இந்திய இரயில்வேதுறை தனது சேவைகளை மார்ச் 25 முதல் நிறுத்திவைத்திருந்தது. அதன் பிறகு தற்போது தனது சிறப்பு இரயில் சேவைகளை துவக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு காலம் 120 நாட்களாக உயர்த்தப்பட்டது

இந்திய இரயில்வே துறை ஏற்கனவே 30 நாட்களாக உள்ள முன்பதிவு காலத்தை 120 நாட்களாக உயர்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here