Home நிகழ்வுகள் இந்தியா நடுராத்திரி 2 மணி; நிர்பயா குற்றவாளியை காக்க வந்த வக்கீல் – இவரை என்ன செய்வது?

நடுராத்திரி 2 மணி; நிர்பயா குற்றவாளியை காக்க வந்த வக்கீல் – இவரை என்ன செய்வது?

2208
0
நிர்பயா வக்கீல்

நிர்பயா குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வக்கீல் பெயர் எ.பி.சிங். இவர் தன்னை ஒரு சிறந்த வழக்கறிஞராக கட்ட பெரும்பாடுபட்டார்.

கற்பழிப்பு வழக்கில் ஆதாரத்துடனும், குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்பும், தண்டனை அறிவிக்கப்பட்ட பின்பும் நான்கு பேரையும் தூக்கிலிடமுடியவில்லை.

தண்டனை கொடுத்த நீதிமன்றமே பலமுறை தள்ளிவைத்துவிட்டது. காரணம் எ.பி.சிங். கிமினல்களுக்கு உதவும் கிரிமினல் லாயர் கொடுத்த ஐடியா.

இத்தனையையும் தாண்டி இன்று காலை 5.30 மணிக்கு நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட முடிவு செய்யப்பட்டது.

நேற்று மட்டும் பல மனுக்களை பல்வேறு இடங்களில் தாக்கல் செய்யப்பட்டது. அத்தனையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இருப்பினும் எ.பி.சிங் விடிவதற்குள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட செய்தி வர வேண்டும் தான் உலக அளவில் புகழ் பெற வேண்டும் என்ற சுயநலத்துடன் இரவு 2 மணிக்கு நீதிபதி வீட்டு வாசலில் நிற்கின்றார்.

பல்வேறு பொய்களை அடுக்கி எப்படியாவது தூக்கி நிறுத்தி வைக்கவேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு உள்ளார்.

உச்சநீதிபதி அனைவரும் ஏற்கனவே ஒன்று கூடி இந்த வழக்கில் இனிமேல் எந்த சலுகைகளும் வழங்க முடியாது என முடிவு செய்ததால் தூக்கு தண்டனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

வக்கீல் எ.பி.சிங் இந்தியாவில் உள்ள கிரிமினல்களுக்கு ஒன்று புரிய வைத்து விட்டார். நீங்கள் கொடுக்கும் காசுக்கு மேல் கூவுவேன் என்று.

நிர்பயாவை பலாத்காரம் செய்து கொன்ற இந்த நால்வருக்கும் தாங்கள் இந்த நாளில் இறந்துவிடுவோம் என நேரம் குறித்து அதை பல முறை மாற்றி பல சலுகைகள் கிடைத்து இறுதியில் இறந்துள்ளனர்.

ஆனால் நிர்பயா தான் உயிருக்கு போராடிய நேரத்தில் ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து கொடூரமாக இறந்தார்.

அந்த பெண்ணின் இறப்பை இந்த வழக்கறிஞரால் தள்ளிப்போட முடியுமா? இவருடைய மகளாக இருந்தால் தனக்கு பணமும், புகழும் தான் முக்கியம் என இப்படி நடந்துகொண்டு இருப்பாரா?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here